முதல்வர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசுத் துறையின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டத்தில் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்கள், கிளை செயலாளர்கள், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும், ஏற்கனவே சட்டப்பேரவையில் அரவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் நிலை என்ன என்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் நாளான இன்று நிதி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, பொதுத்துறை எரிசக்தி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தொழில்துறை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பவியல் தமிழ் வளர்ச்சித் துறை சுற்றுலாத்துறை மனிதவள மேம்பாடு வணிகவரித்துறை வருவாய் துறை உள்ளிட்ட 19 துறைகள் சார்ந்த செயலர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்கிறார்
அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து அறிவிப்புகளும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.