தாழையூரைச் சேர்ந்த தங்கவேல். இந்தித் திணிப்பிற்கு எதிராக தனது உடலை தீக்கிரையாக்கிக் கொண்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும் மணி ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மேட்டூர் அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: டிச.4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... எதற்கு தெரியுமா?
இந்த நிலையில் தங்கவேல் உயிரிழப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கலில்,ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம் எனவும், இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த தங்கவேல் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்
இந்தியைத் திணிக்காதே என, உரத்துச் சொல்லி வரும் நிலையில், ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK, Hindi