முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதுகு வலி காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதுகுவலி காரணமாக நாளை பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குரு பூஜையில் பங்கேற்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 30ம் தேதி தேவரின் 115வது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு, முதலமைச்சர் ஸ்டாலின் முதுகு வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை மேற்க்கொண்டார். அதில் அவர், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை

எனவே, வரும் 30ஆம் தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குரு பூஜையில்,  முதலமைச்சர் அவர்களின் சார்பில், அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Devar Jayanthi