• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடிதம் எழுதிய 6ம் வகுப்பு மாணவிக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின்!

கடிதம் எழுதிய 6ம் வகுப்பு மாணவிக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin

MK Stalin

மாணவிக்கு போன் செய்து, நன்றாக படிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்.

  • Share this:
பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பிய 6ம் வகுப்பு மாணவிக்கு, போன் செய்து நன்றாக படிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆறாம் வகுப்பு மாணவி பிரஜ்னாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன் - உதயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி பிரஜ்னா என்ற ஆறாம் வகுப்பு படித்துவரும் மாணவி, பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று (15.10.2021) தொடர்புகொண்ட பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் – முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

மேலும், அந்த மாணவியிடம் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்.

பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதிய மாணவிக்கு எதிர்பாராத விதமாக முதல்வரே போன் செய்து பேசியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: