• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lockdown Relaxation: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

Lockdown Relaxation: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
ஜூலை 5ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதுடன் கூடுதல் தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. நாளை (ஜூன் 28) முதல் இந்த தளர்வுகள் அமலாக இருக்கும் நிலையில் மேலும் சில கூடுதல் தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஜுன் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள், வணிக அமைப்புகள் ஆகியோரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், கருத்துக்கள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு பின்வரும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

வகை 2 மாவட்டங்களில், துணிக்கடைகள், நகை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read:  சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வர வேண்டும் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் வகை 2 மாவட்டங்களாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: