• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் - கனிமொழி காட்டம்

CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் - கனிமொழி காட்டம்

கனிமொழி (கோப்புப் படம்)

கனிமொழி (கோப்புப் படம்)

CAA NRC என்ன என்பதைமுதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். குடிமக்கள் பதிவேடு துவங்கும் போது பிரச்சனைகளும் துவங்கும் என கனிமொழி தெரிவி?

  • Share this:
CAA NRC என்ன என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற பேரவையில் பேசுகையில், குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனவும், மாநில அரசு இந்த விவகாரத்தில் எதுவும் செய்யமுடியாது எனவும், குடியுரிமைச் திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை லயோலா கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ’CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். குடிமக்கள் பதிவேடு தொடங்கும் போது பிரச்சனைகளும் தொடங்கும். CAA அரசியலமைப்புக்கு எதிரானது. இது இன்று பாதிக்குமா? நாளை பாதிக்குமா? என்பதை தாண்டி அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் சட்டம்.

NRC கொண்டு வந்த பிறகு மக்கள் பாதிக்கப்படுவார்கள். தி.மு.க மட்டுமே போராட்டம் நடத்தவில்லை. இந்தியா முழுக்க போராடுகின்றனர். நீதி கட்சி கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை அதற்கு பின்னர் வந்த யாரும் இதுவரை தடுத்து நிறுத்தியது இல்லை. பல்வேறு முக்கியத்துவத்தை கொடுத்து வந்தனர். ஆனால் இன்று அந்த திட்டத்தைக்கூட தனியாரிடம் கொடுத்தாகிவிட்டது. கருணாநிதியால் சத்துணவில் தமிழ்நாட்டில் முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று வெங்காயம், பூண்டு இல்லாத நிலை. உணவை இங்கு அரசியலாக மாற்றி வருகின்றனர். எல்லாவற்றிலும் அரசியல். மதிய உணவு திட்டத்தில் இன்று அதே அரசியல் நுழைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: