எம்எல்ஏ மகனுக்கு குவாரி குத்தகை.. அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

எம்எல்ஏ மகனுக்கு குவாரி குத்தகை.. அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டர் தொடர்பாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

  • Share this:
எம்எல்ஏ மகனுக்கு குவாரி குத்தகை வழங்கிய கனிமங்கள் வளத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வானூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு . சக்ரபாணியின் மகனுக்கு கனிமங்கள் வளத்துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் குவாரி குத்தகை அளித்திருப்பது திருவக்கரையில் உள்ள அந்த குவாரியில் 3.11.2020 அன்று நடைபெற்ற விபத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. வானூர் காவல் நிலையத்தினர், 'திருவக்கரை சக்ரபாணி மகன் பிரபு கல்குவாரியில்' என்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுடைய குவாரி என்பதை மறைத்து பதிவு செய்துள்ளார்கள்.

முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது சம்பந்திக்கும் உறவினருக்கும் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களைக் கொடுத்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவரது சகோதரருக்கும், உறவினர்களுக்கும்
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேலான ஒப்பந்தங்களைக் கொடுத்து வருகிறார். கனிம வளத்துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் தனது ஊழல் போக, அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு கல்குவாரி உரிமம் கொடுத்துள்ளார்.

Also read: பீகார் தேர்தல்: 'காங்கிரஸை பயனுள்ள மாற்றாக கருதவில்லை' - கபில் சிபல் கருத்தால் பரபரப்புஎந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு காட்டாட்சியை முதலமைச்சர் திரு. பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டர் தொடர்பாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும்."

இவ்வாறு தன் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: