Home /News /tamil-nadu /

சிங்கப் பெண்களே! ஒரு தந்தையின் பேரன்போடு உடனிருப்பேன்..மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மெசேஜ்!

சிங்கப் பெண்களே! ஒரு தந்தையின் பேரன்போடு உடனிருப்பேன்..மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மெசேஜ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதில் தமிழ்நாடு முழுவதும் பயனடையவுள்ள ஒரு லட்சம் மாணவிகளுக்கும் முதலமைச்சர் சார்பில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாடு அரசின் உயர்கல்வி உறுதி திட்டத்தை, இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதில் பயனடையும் மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு நெகிழ்ச்சிகரமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

    6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு, மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக் கொண்டார்.

    இதையும் வாசிக்க: மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

    இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். அதில் முதற்கட்டமாக சிலருக்கு ரூ. 1000 பெறும் வங்கி கணக்கின் ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் பயனடையவுள்ள ஒரு லட்சம் மாணவிகளுக்கும் முதலமைச்சர் சார்பில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

     



    அதில், “நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட சிங்கப் பெண்களே! கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்!
    -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Girl students, Tamilnadu government

    அடுத்த செய்தி