விவசாயிகளே... விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லையா? உங்களுக்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

விவசாயிகளே... விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லையா?  உங்களுக்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு
  • Share this:
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டால், மாவட்ட வேளாண் துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றை பாதுகாத்து வைத்து, தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்யவும் இயங்கி வரும் குளிர் பதன கிடங்குகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

காய்கறி மற்றும் பழங்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து நியாயமான விலையில் விநியோகம் செய்யும் உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


மேலும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க, கூடுதலாக 500 தோட்டக்கலைத்துறை வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும், சந்தையில் விற்கப்படும் பொருட்களின் மதிப்பில் இருந்து வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் ஒரு சதவீத சந்தை கட்டணம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், மாவட்ட வேளாண் துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
























































































































































வ. எண் மாவட்டம் கைபேசி எண்
1. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு 9843938301
2. திருவள்ளூர் 7708541376
3. வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் 9442580451
4. திருவண்ணாமலை 9361110552
5. கடலூர் 9486420540
6. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி 9443787717
7. சேலம் 9443363660
8. நாமக்கல் 9080386024
9. தருமபுரி 9865815763
10. கிருஷ்ணகிரி 9444710229
11. கோயம்புத்தூர் 9003660358
12. நீலகிரி 9994934804
13. ஈரோடு மற்றும் திருப்பூர் 9443546094
14. திருச்சி 7010330487
15. கரூர் 7305630487
16. பெரம்பலூர் மற்றும் அரியலூர் 7010330487
17. தஞ்சாவூர் 9944669922
18. நாகப்பட்டிணம் 9944669922
19. திருவாரூர் 9944669922
20. புதுக்கோட்டை 9443008455
21. இராமநாதபுரம் 9677367772
22. சிவகங்கை 9994621079
23. மதுரை 9443004662
24. தேனி 9442009901
25. திண்டுக்கல் 9786785180
26. விருதுநகர் 7598286370
27. திருநெல்வேலி மற்றும் தென்காசி 9842789906
28. தூத்துக்குடி 9487523498
29. கன்னியாகுமரி 9443432430

மாநில அளவில் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

044 – 22253884, 22253885, 22253496, 95000 91904. மேற்கண்ட அலுவலர்கள் வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்குண்டான வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்துக்கான உரிய அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றுத் தருதல், குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகளுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகளுக்கு உதவி புரிவார்கள்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading