சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்துள்ளது - முதல்வர் பேச்சு

பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதில் இருந்து 31 வழக்குகள் சிலைக்கடத்தலில் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

news18
Updated: July 19, 2019, 1:04 PM IST
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்துள்ளது - முதல்வர் பேச்சு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: July 19, 2019, 1:04 PM IST
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்த நிலையில், திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசுகையில், “சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன் மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பை அரசு வழங்கவில்லை. சிறந்த அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கி அரசு நடுநிலையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

பொன் மாணிக்கவேல் அரசிற்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அரசிற்கு ஈகோ. ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் மியூஸியம் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையை அவர்களே திருப்பி கொடுப்பதாக சொல்லியும் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என்றார்.


இதற்கு பதிலளித்த முதல்வர், பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதில் இருந்து 31 வழக்குகள் சிலைக்கடத்தலில் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர், 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.

மேலும் அவரது பதவிக்காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 வழக்குகள் தான் பதிவு செய்யப்படுவதாகவும் முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.

மேலும் சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக உள்ள பொன் மாணிக்கவேலுக்கு 204 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், 31 நான்கு சக்கர வாகனம், உட்பட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து சுமார் 22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவருக்கு தேவையான அனைத்து தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Loading...

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...