கோடநாடு எஸ்டேட்டில் நடந்த தொடர் மரணங்களின் பின்னணி குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு ஆவணப்படம் போன்ற வீடியோவை நேற்று வெளியிட்டார். இதில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தான சில செய்திகள் சர்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இன்று இந்த கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. கோடநாடு கொள்ளை தொடர்பாக நேற்று வெளியான வீடியோ குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர். இதில் அரசியல் பின்புலம் உள்ளது. உண்மை வெளிச்சத்துக்கு வரும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் வெளிவருவார்கள். அரசியலுக்காகத் தவறானத் தகவல்களைப் பரப்புகின்றனர்.” என்றார்.
மேலும் பார்க்க: ஜெயலலிதா ஒரு மாஸ் லீடர்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Minister Edappadi Palanisamy, Jayalalithaa, Kodanadu estate