குடிநீர் பஞ்சம் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் : முதல்வர் பழனிசாமி

குடிநீர் பஞ்சம் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் : முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் இருப்பதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐம்பது கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார். 60 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், ஐந்து மாதத்திற்குள் ஜெயலலிதா நினைவிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்றார்.


மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்

தொடர்ந்து குடிநீர் பஞ்சம் குறித்து பேசிய முதலமைச்சர், இயற்கை பொய்த்துவிட்டதால் தான் இந்தாண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். எனினும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். ஏதோ ஒரு இடத்தில் நடைபெறும் ஓரிரு சம்பவங்களை மட்டுமே வைத்து, தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் இருப்பதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading