’தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்’ - தமிழக முதல்வர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து..

Happy Teachers' Day 2020 | நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்’ - தமிழக முதல்வர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து..
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
ஆசிரியர் தினம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உடலுக்குக் கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவரது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்ற ஔவையாரின் பாடலை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும் அவர்கள் தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 மேலும் படிக்க...காட்டுமன்னார்கோவில் வெடிவிபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் - தமிழக அரசு

நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு , வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்த நன்னாளில் தனது உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading