• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

முதலமைச்சர் பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்தித்து விளக்கம் அளிக்கிறார்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுதொடர்பாக ஆளுநரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் அவ்வப்போது நேரில் விளக்கமளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் நேரில் சந்தித்து பேசுகிறார்.

    அப்போது கொரோனா பரவல் குறித்தும், தடுப்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த இரு மாதங்களில் மூன்றாவது முறையாக ஆளுநரை முதலமைச்சார் சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...

    சென்னை பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சோதனை முயற்சி - எப்படி செயல்படுகிறது?






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: