சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக 22-ம் தேதி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக அரசு தலைமைச் செயலகம்

அன்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தலைமை செயலகம் வருமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை தலைமை செயலகத்தில் வரும் 22ம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முதலமைச்சரின் டெல்லி பயணத்துக்கு பின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் இன்று காலை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also read... வடகிழக்குப் பருவமழை தமிழகத்தை விட்டு முழுவதுமாக விலகியது - வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வரும் 22 ஆம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். அன்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் தலைமை செயலகம் வருமாறு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர்,இடைக்கால பட்ஜெட், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: