நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி..
நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி..
நடமாடும் அம்மா உணவகம்
முதற்கட்டமாக இந்த மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டாலும், நாளடைவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நடமாடும் அம்மா உணவக வாகனங்களை தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் ஏற்கனவே 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திடத்தை விரிவுபடுத்தி, 27 லட்சன் ரூபாய் மதிப்பில் மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் இன்று முதல் சென்னை மாநகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து உணவு வழங்கினார்.
அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் இந்த நடமாடும் அம்மா உணவகத்தில் கிடைக்கும். அதேபோல், விலைப்பட்டியலிலும் எந்த மாற்றமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று மண்டலங்களில் நடமாடும் அம்மா உணவகங்கள் இயங்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டாலும், நாளடைவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள், பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் இந்த நடமாடும் வாகனங்கள் செயல்பட உள்ளது. நடமாடும் அம்மா உணவக வாகனத்தில் குடிநீர், கைகழுவும் வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.