Home /News /tamil-nadu /

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசில் பணிபுரியும் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை தமிழக அரசில் பணிபுரியும் மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தே பெறுகிறார் - மு.க.ஸ்டாலின்

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றிய அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு அலட்சியம் செய்து வருகிறது. போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பினர். ஆனால், அவர்கள் மீதான துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையை அரசு ரத்து செய்யவில்லை.

    கலைஞர் அவர்களது ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ன்படி காலம் சார்ந்த ஊதிய உயர்வினை 5, 9, 11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசில் பணிபுரியும் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை தமிழக அரசில் பணிபுரியும் மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தே பெறுகிறார்! அவர்கள் 13 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை 20 ஆண்டுகள் கழித்துதான் மாநில அரசு மருத்துவர்கள் பெறுகிறார்கள்.

    Also read: விவசாய நிலங்களைக் காக்க, எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்க - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

    கொரோனாவில் உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு அரசு அறிவித்த உதவித் தொகையையும் வழங்கவில்லை. உயிர் நீத்தவர்கள் கணக்கும் அரசிடம் முறையாக இல்லை. அரசு ஆணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு தமிழக அரசு மருத்துவர்களுக்கும் கிடைத்திட வேண்டும்.

    இதுதவிர, துறை நடவடிக்கைகளை ரத்துசெய்வது, நீக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்குவது, முதுநிலை மற்றும் உயர் சிறப்புத் தகுதி மருத்துவக் கல்வியில் 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்."

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Dmk leader mk stalin, Govt Doctors

    அடுத்த செய்தி