திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு - திமுக எதிர்ப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
- News18
- Last Updated: September 16, 2020, 4:19 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும் கள்ளக்குறிச்சியும் உள்ளதை கருத்தில் கொண்டும், இவ்விரு மாவட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவுமே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார். புதிய பல்கலைக்கழகத்திற்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Also read... பாராமெடிக்கல் மாணவர்கள் கொரோனா பணிக்கு வரவேண்டும் - தமிழக அரசு உத்தரவு..
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இந்த நிலையில் எதற்காக அதனை பிரிக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.முதலமைச்சராக இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதி இந்த பல்கலைக்கழகத்தை கொண்டு வந்ததற்காக இவ்வாறு செய்கிறீர்களா என்றும் துரைமுருகன் கேள்வியெழுப்பினார். வேண்டுமென்றால் நீங்கள் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும் கள்ளக்குறிச்சியும் உள்ளதை கருத்தில் கொண்டும், இவ்விரு மாவட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவுமே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.