விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.


மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.

அந்த கடிதத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்றும், நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட் கால நிதியாக 90,000 கோடி கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதேப்போல மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத்தொகையை ஈடு செய்ய 20,622 கோடியை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர் எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.Also Read... அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று

மேலும், மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், அது தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் ரூ.50.88 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் கூறினார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading