நீலகிரியில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 23 நிரந்தர மருத்துவக் குழுக்களும், 13 நடமாடும் மருத்துவக் குழுக்களும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

news18
Updated: August 9, 2019, 6:19 PM IST
நீலகிரியில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
நீலகிரியில் மழை
news18
Updated: August 9, 2019, 6:19 PM IST
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பலத்த மழை பெய்து வரும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் சிக்கியிருக்கும் 40 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காட்டுக்குப்பை என்ற இடத்தில் கனமழையால் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட 1704 பேர் 28 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளைச் சீர் செய்யும் பணியில் 29 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்துப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், மீட்புப் பணிகளை மேற்கொள்ள சூலூரில் உள்ள இந்திய விமானப்படைப் பிரிவை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

23 நிரந்தர மருத்துவக் குழுக்களும், 13 நடமாடும் மருத்துவக் குழுக்களும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Loading...

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...