வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், எடப்பாடி பழனிசாமி

வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

 • Share this:
  மாநிலங்ளவையில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  மக்களவையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆதரித்தார். ஆனால், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், வாக்கெடுப்பின்போது, வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

  Also read: வேளாண் மசோதாக்கள்: உழவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை  இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்களில் விவசாயிகளுக்கு நன்மை இருந்ததால் அதை ஆதரித்ததாகவும், மாநிலங்களவையில் எதிர்த்தது தொடர்பாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறினார்.
  Published by:Rizwan
  First published: