கொரோனா தடுப்புப்பணிகள் ஆய்வு: முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் மீண்டும் பயணம்..

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்புப்பணிகள் ஆய்வு: முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் மீண்டும் பயணம்..
முதல்வர்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அண்மையில் வடமாவட்டங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு இன்று காலை செல்லும் முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதையடுத்து, நாகை மாவட்டத்திற்கு மதியம் செல்கிறார்.இதேபோல், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு நடத்துகிறார். இந்தப் பயணத்தின்போது, விவசாய அமைப்பினர், தொழிற்துறையினர், மகளிர் சுய உதவி குழுவினர்களோடும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். அங்கும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி கேட்டறிகிறார்.


மேலும் படிக்க...இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

மேலும், மாவட்டங்களின் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading