மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: September 15, 2020, 2:23 PM IST
  • Share this:
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு எந்தவகையிலும் அனுமதிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை பெற அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் குழு பிரதமரை பார்க்க இருப்பதாகவும் அவ்வாறு பார்க்கும் போது தமிழகத்தின் செயல்பாடு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவரை கலந்து பேசிய முக்கிய நபர்கள் பிரதமரை பார்க்க வேண்டும் அல்லது முதல்வர் தலைமையிலான குழுவே பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நிலைப்பாடை எடுத்துக் கூற வேண்டும் எனவும் துரைமுருகன் பேசினார்.


Also read... தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியது புதுவை மத்திய பல்கலைக்கழகம்!

மத்தியிலும் பாஜக ஆட்சி கர்நாடகத்திலும் பாஜக ஆட்சி என்பதால் கர்நாடகா எடுத்திருக்கும் நடவடிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் துரைமுருகன் கூறினார் .

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இது குறித்து மேலாண்மை ஆணையத்தில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பேசினார்.

கர்நாடகாவில் எந்த வகையிலும் மேக தாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading