தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில டோல் கேட்டுகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

news18
Updated: July 12, 2019, 1:39 PM IST
தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: July 12, 2019, 1:39 PM IST
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மத்திய அரசுடன் பேசி தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்க உதவ வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில சுங்கச் சாவடிகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சியை சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போது தான் சுங்கச் சாவடி வந்தது எனவும், திமுக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இருக்கிறோம் என பெருமையாக சொல்கிறீர்கள், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசி உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, போலியான வாக்குறுதிகள் கொடுத்து திமுக நாடாளுமன்ற தேர்தலில் வென்றுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...