CM PALANISAMY HAS SAID THAT A DECISION ON OPENING SCHOOLS IN TN WILL BE TAKEN SOON VIN
’பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’ - முதலமைச்சர் பழனிசாமி..
முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கன்னியாகுமரி சென்ற முதலமைச்சர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 153.92 கோடி ரூபாய் செலவில் முடிவடைந்த 21 திட்டங்களை தொடங்கிவைத்தார்.
60.44 கோடி ரூபாய் மதிப்பிலான 36 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 2,736 பயனாளிகளுக்கு 54.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, விவசாயப் பிரதிநிதிகள், மீனவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.