9 மருத்துவக்கல்லூரிகள் மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு... முதல்வர்...!

9 மருத்துவக்கல்லூரிகள் மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு... முதல்வர்...!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 2, 2019, 1:11 PM IST
  • Share this:
புதியதாக தொடங்கப்பட உள்ள 9 மருத்துவக்கல்லூரிகள் மூலம் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 2,721 செவிலியர்கள் உள்ளிட்ட 5,224 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருநங்கை அன்புராஜுக்கு முதல் பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர், 32 காணொலி கண் பரிசோதனை மையங்களை திறந்து வைத்தார்.


இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார துறையில் தமிழகம் முதல் மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்வதாக கூறினார்.

புதிதாக தொடங்கப்பட உள்ள 9 மருத்துவ கல்லூரிகள் மூலம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த உள்ளதாக கூறிய பழனிசாமி, கூடுதலாக அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருவண்ணாமலை, சென்னை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளதாகவும், தமிழகத்தில் 254 புதிய சுகாதார மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.Also see...
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading