அதுபோன்ற காட்சிகள் வேண்டாம்...! நடிகர்களுக்கு முதல்வர் விடுத்த வேண்டுகோள்

அதுபோன்ற காட்சிகள் வேண்டாம்...! நடிகர்களுக்கு முதல்வர் விடுத்த வேண்டுகோள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: November 25, 2019, 11:25 AM IST
  • Share this:
தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை காஜல் அகர்வால், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, ஆர்.வி உதயகுமார் உள்பட பலரும் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரித்து வெற்றிபெற்ற எல்.கே.ஜி., கோமாளி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

பின்னர் பேசிய அவர், சினிமாவில் எம்.ஜி.ஆர். நடித்த காலம்தான் பொற்காலம் எனத் தெரிவித்தார். மேலும், தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading