தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் பட்டாசு தொழில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கு 2 வாரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகரில் பரப்புரையில் ஈடுபட்டார். விருதுநகர் மக்களவை தொகுதியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், பிரதமர் மோடியால் தான் மத்தியில் நிலையான ஆட்சியை தர முடியும் என்பதால், அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தாங்கள் வெற்றிபெற்றால் சிவகாசியில் பட்டாசு தொழில் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.