மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு...!

முதலமைச்சர்

அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பகுதி முழுவதிற்கும் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஜனவரி மாத மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மொத்தம் 1,116 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரண தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  கடந்த ஜனவரி மாதத்தில், பெய்ய வேண்டிய இயல்பான அளவை விட 1,108 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால், 6,81,334 எக்டேர் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  இதனால் மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற அனைத்து பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றிற்கு 20,000 ரூபாய் இடுபொருள் நிவரணத்தொகை வழங்கப்படவுள்ளது.

  மானாவாரி நெற்பயிர் தவிர, பிற மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 10,000 ரூபாய் இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.

  Also read... அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்த சசிகலா - விளக்கமளித்த டிடிவி தினகரன்!

  மேலும், பல்லாண்டு கால பயிர்கள் ஹெக்டேர் ஒன்றிற்கு 25 ஆயிரம் ரூபாய் இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

  இது தவிர, அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பகுதி முழுவதிற்கும் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  மொத்தமாக 11,43,000 விவசாயிகளின் வங்கி கணக்கில், 1116 கோடி ரூபாய் வரவு வைக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு தமிழகம் வர உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: