கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 118 அவசர ஊர்திகள் - தொடங்கிவைத்த முதல்வர்

கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக 118 அவசர ஊர்திகள் - தொடங்கிவைத்த முதல்வர்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 31, 2020, 7:27 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் தற்பொழுது 1,005 அவசர ஊர்திகள் இயங்கி வருகின்றன. மேலும் 500 அவசர ஊர்திகளை, 103.50 கோடி ரூபாய் செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக 118 ஊர்திகளின் சேவையை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

Also read... தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


செயற்கை சுவாச கருவி, ஆக்ஸிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி என 60 மருத்துவ உபகரணங்கள் ஆம்புலன்சில் இடம்பெற்றுள்ளன.

ஆம்புலன்ஸின் உள்ளே சென்று, அதில் செய்யப்பட்டிருக்கும் வசதிகளை முதலமைச்சசர் ஆய்வு செய்தார். 118 ஆம்புலன்ஸ்களும், தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படவிருக்கின்றன.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading