விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்...!

விலையில்லா மிதிவண்டிகள்

11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2020-21ம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 மாணவ, மாணவிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
214 கோடியே 79 லட்சம் செலவில், 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2020-21 கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 214 கோடியே 79 லட்சம் செலவில், 5,45,166 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள்
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-02ம் கல்வி ஆண்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.

பின்பு, 2005-2006-ம் ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ- மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2020-21ம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 மாணவ, மாணவிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

Also read... சிந்து சமவெளி நாகரிக மக்கள் பன்றி, மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டுள்ளனர் - தொல்லியல் ஆய்வில் தகவல்!அதனைத்தொடர்ந்து, மறைந்த பத்திரிகையாளர் மோகன் என்பவரின் மனைவியிடம் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி, ஜெயக்குமார், பாண்டியராஜன், வளர்மதி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published: