நான் விவசாயியாக இருப்பதால்தான் புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறேன் - முதல்வர் விளக்கம்!

முதலமைச்சர் பழனிசாமி

வேளாங்கண்ணியை அடுத்த கருங்கன்னிக்கு சென்ற முதலமைச்சர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்ப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். தான், விவசாயியாக இருப்பதால்தான், புதிய வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

  கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி, செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இதையடுத்து, இரண்டாவது நாளாக நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பார்வையிட்டார்.

  முன்னதாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்ற முதலமைச்சரை பங்குதந்தைகள் வரவேற்று மாதா சிலையை வழங்கினர். பின்னர், அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

  இதையடுத்து நாகூர் தர்காவிற்கு சென்ற முதலமைச்சர், தொப்பி அணிந்து தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் கனமழையால் சேதமடைந்த நாகூர் தர்காவின் சுற்றுச்சுவர் மற்றும் கீழ்க்கரை சாலைப் பகுதிகளை பார்வையிட்டார்.

  வேளாங்கண்ணியை அடுத்த கருங்கன்னிக்கு சென்ற முதலமைச்சர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

  தொடர்ந்து, பழங்கள்ளிமேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 360 பேருக்கு நிவாரணப்பொருட்களும், விவசாய இடுபொருட்களும் வழங்கினார். மேலும், அங்குள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட முதலமைச்சர், பொதுமக்களுக்காக சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்தார்.

  நாகையை அடுத்து திருவாரூர் மாவட்டம் சென்ற முதலைமைச்சர், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்கலாடி கிராமத்தில், கனமழையால் மூழ்கிய சம்பா பயிர்களை பார்வையிட்டார். அப்போது மழைநீர் தேங்கிய வயலில் இறங்கியவரிடம், அழுகிய நெற்பயிர்களை காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  மேலும், திருத்துறைப்பூண்டி முகாமிற்கு தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய முதலமைச்சர், அவர்களுக்கு தானே உணவு பரிமாறினார்.

  தென்னவராயநல்லூரில் ஆய்வு நடத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், 2016-ல் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அம்சம்தான் வேளாண் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றார். ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாகவும் சாடினார்.

  Also read... அமைச்சர் வேலுமணிக்கு எதிராரான புகாரில் விசாரணை அறிக்கையை தரவேண்டிய அவசியமில்லை - தமிழக அரசு  8 வழிச்சாலை திட்டம், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பதே மாநில அரசின் பணி என்று கூறினார். இந்த திட்டப் பணிகள் முடிவடைய 6 ஆண்டுகள் பிடிக்கும் என்றும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

  இதை தொடர்ந்து, கொல்லுமாங்குடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: