மக்கள் நலப் பணிகள் குறித்து மாதம்தோறும் அறிக்கை தர ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்ணாகவும், கரங்களாகவும் செயல்பட்டால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையும் என்றார்.

Web Desk | news18
Updated: August 8, 2019, 5:46 PM IST
மக்கள் நலப் பணிகள் குறித்து மாதம்தோறும் அறிக்கை தர ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: August 8, 2019, 5:46 PM IST
மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கையளிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் மதுரை, நெல்லை உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகள் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்ணாகவும், கரங்களாகவும் செயல்பட்டால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையும் என்றார்.குடிமராமத்து, மழை நீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளை மாதந்தோறும் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஆட்சியர்களுடனான கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தனது தலைமையில் நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Loading...

இதேபோன்று நாளை வேலூர் தவிர 15 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்த உள்ளார்.

Also see...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...