Home /News /tamil-nadu /

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத் குமார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத் குமார்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு இடையூறு செய்வதாக கூறிய முதலமைச்சர், இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

  • News18
  • Last Updated :
    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

    தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக அரசையே சாரும் . வீரன் காளையை அடக்குவது போன்ற சிலை அலங்காநல்லூரில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு இடையூறு செய்வதாக கூறிய முதலமைச்சர், இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

    இதனிடையே வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேன்மொழிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே அதிக விருதுகள் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்றார்.

    மேலும்  அதிமுக ஆட்சியை ஸ்டாலின் கலைத்து விட நினைத்து முடியாமல் போனது என்றார், அதிமுகவில் தொழிலாளிகூட முதல்வர் ஆக முடியும் என்றும், தமிழக மக்கள் நன்றாக சிந்திக்கக் கூடியவர்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, Elections 2019, Lok Sabha Election 2019, Mullai Periyar, Raveendranath kumar, Tamil Nadu Lok Sabha Elections 2019, Theni S22p33

    அடுத்த செய்தி