சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

தருமபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

news18
Updated: July 11, 2019, 4:05 PM IST
சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: July 11, 2019, 4:05 PM IST
தோட்டக்கலை துறையின் உதவியுடன் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சென்னையில் கூவம் சீரமைப்பிற்காக நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

விரிவான திட்ட அறிக்கை மூலம் 2,371 கோடி ரூபாய் செலவில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் 6 கோடியே 51 ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நடப்பாண்டில் 7.5 கோடி செலவில் மருத்துவ பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

தருமபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...