Home /News /tamil-nadu /

திமுகவுடன் கூட்டுசேர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் அழிக்க தினகரன் முயற்சி: முதலமைச்சர் குற்றச்சாட்டு!

திமுகவுடன் கூட்டுசேர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் அழிக்க தினகரன் முயற்சி: முதலமைச்சர் குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

வசவப்பபுரம், வல்லநாடு, செக்காரக்குடி, ஓசநூத்து உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்குச் சேகரித்த முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திமுகவுடன் கூட்டு சேர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் அழிக்கும் முயற்சியில் டிடிவி.தினகரன் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    இடைத்தேர்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

    வசவப்பபுரம், வல்லநாடு, செக்காரக்குடி, ஓசநூத்து உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்குச் சேகரித்த முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்றார்.

    அத்துடன், அதிமுக-வால் அடையாளம் காட்டப்பட்டவர்களே இக்கட்சியை அழிக்க முயற்சிப்பதாக தினகரனை சாடினார்.

    தனது பிறந்த நாளையொட்டியும், அன்னையர் தினத்தையொட்டியும், செக்காரக்குடியில் முதல்வர் கேக் வெட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிருக்கு அவர் கேக் வழங்கினார். அப்போது, ஒரு பெண் குழந்தைக்கு ஜெயலட்சுமி என்று பெயர் சூட்டினார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: ADMK, AMMK, Cm edappadi palanisamy, TTV Dhinakaran

    அடுத்த செய்தி