தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை

மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மாநிலத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை நடைப்பெற்றது.

தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை
முதல்வர்
  • News18 Tamil
  • Last Updated: September 8, 2020, 12:23 PM IST
  • Share this:
தமிழகத்தில் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதோடு, பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக மாநிலத்திற்குள் பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற தளர்வினால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று கருதி, வழிகாட்டி விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் அவற்றை மீறுவதை குற்றம் என்று அறிவித்து அபராத தொகையையும் அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, வழிகாட்டி விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் அக்டோபர் மாதத்தில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உயரும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.


பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை உயர்த்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை மையங்களை தயார்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படிக்க... விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் மோசடி: உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக முதலமைச்சர் பழனிசாமி

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading