அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசுக்கு எதிராக திமுக அறிவித்துள்ள போராட்டம், அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இளநிலை மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கான சட்ட முன்வடிவுக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சட்ட முன்வடிவு விவகாரத்தில் விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம், அமைச்சர்கள் குழு வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஆளுநர் ஏற்கனவே உறுதியளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தங்களால் தான் இது நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் திமுக அறிவித்துள்ள போராட்டம் என்பது அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்றும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பில் மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கண்டு ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் உள்ளதாகவும் சாடியுள்ளார்.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.