முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் - முதல்வர்!

விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் - முதல்வர்!

முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று ஸ்டாலினும், கனிமொழியும் பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் சாடினார்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று ஸ்டாலினும், கனிமொழியும் பொய் பிரச்சாரம் செய்வதாக சாடினார். ஸ்டாலின் பரப்புரையின்போது மக்களிடம் மனு பெறுவதை குறிப்பிட்டு பேசிய முதல்வர், ஏற்கெனவே தொகுதி தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார். 13 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் முதல்வர் சாடினார்.

அடுத்ததாக பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர், எந்த துறையில் ஊழல் என நேரடியாக பேச சொன்னால் அதற்கு வராமல், ஸ்டாலின் ஊர் ஊராய் பொய் பிரச்சாரம் செய்வதாக விமர்சித்தார்.

Also read... கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி திமுக, மநீம வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அடுத்ததாக, பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாட வந்த முதலமைச்சருக்கு, கும்மியடித்து, பாடல் பாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த முதல்வரிடம், ஜெயலலிதா பிறந்த நாளை பெண்கள் மேம்பாட்டு நாளாக அறிவித்து விருது வழங்க வேண்டுமென மகளிர் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் வாழ உகந்த நகராக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தை கடுமையாக்கி உள்ளதாகவும் முதல்வர் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக முதல்வருடன் நின்று, மகளிர் குழுவினர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Chief Minister Edappadi Palanisamy