களைகட்டும் வேலூர் தேர்தல் களம்: முதலமைச்சர், திமுக தலைவர் இன்று பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பிரசாரத்தை தொடங்குவதையொட்டி வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

news18
Updated: July 27, 2019, 7:33 AM IST
களைகட்டும் வேலூர் தேர்தல் களம்: முதலமைச்சர், திமுக தலைவர் இன்று பிரசாரம்!
ஸ்டாலின் மற்றும் பழனிசாமி
news18
Updated: July 27, 2019, 7:33 AM IST
வேலூர் மக்களவை தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று பரப்புரையை தொடங்க உள்ளனர்.

பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி உள்ளிட்டவை தீவிரமடைந்துள்ளன.


இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

மாலை 5 மணிக்கு வாணியம்பாடியில் பிரசாரத்தை தொடங்கும் அவர், மாலை 6 மணிக்கு ஆம்பூரில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதேபோன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் கே.விகுப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

Loading...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பிரசாரத்தை தொடங்குவதையொட்டி வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...