ரூ.24.77 கோடி மதிப்பீட்டில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கிவைத்தார்!

முதலமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார்

முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 90 புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்கினார், தற்போது இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக சுகாதரத்துறை சார்பில் 24,77,54.000 ரூபாய் மதிப்பீட்டில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக கூடுதல் ஆம்புலன்ஸ் துவக்க விழா நடைபெற்றது, தமிழகத்தில் தற்போது 1180 அவசரகால 108 ஆம்பூலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது, இதுவரை சுமார் 25,34,000 கர்ப்பிணி பெண்களும் மற்றும் ஒரு கோடியே இரண்டு லட்சத்திற்க்கு மேலான பொது மக்கள் பயனடைந்துள்ளனர்,

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டபேரவை கூட்ட தொடரில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் நடப்பு ஆண்டில் 500 புதிய அவசர கால ஊர்திகளை 125 கோடி செலவில் வழங்கபடுமென அறிவித்துருந்தார்.

Also read... எஸ்.ஏ.சி கட்சித் தலைவரை விஜய் ஆதரவாளர் மிரட்டியதாக குற்றச்சாட்டு..அதில் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 90 புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்கினார், தற்போது இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

அதில் 9 வாகனங்கள் அடையாளமாக தலைமை செயலகத்தில் அணிவகுத்து சென்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட மற்ற துறைகளை சார்ந்த அமைச்சர் கலந்துகொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published: