கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம்... முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம்... முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுவை முதல்வர் நாராயணசாமி.
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் பதினான்காவது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் இருபதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சரும் நிதித் துறை அமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்பு கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில்  பேரவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அமைச்சர்கள், காங்கிரஸ், அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

Also read... கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் யுத்தம் தொடரும்... பிரதமர் மோடி

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 9.16 கோடி வந்துள்ளது.கட்டுப்படுத்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படும். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading