புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதியிடம் முதல்வர் நாராயணசாமி மற்றும்அமைச்சர்கள் மனு அளித்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதனால் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார்
செய்து கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து மக்களிடம் 30 தொகுதியிலும் கிரண்பேடியை திரும்பப்பெற ஜனாதிபதியை வலியுறுத்தி கையெழுத்து பெற்றனர்.
இந்த பிரதியை ஜனாதிபதியிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தாமி, எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லியில் முகாமிட்ட அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்தித்தனர். அப்போது முதல்அமைச்சர் நாராயணசாமி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளை வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கிரண்பேடி எந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார் என்பதை ஜனாதிபதியிடம் விளக்கி கூறினார். அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளில் ஆளுநர் தலையீடு தொடர்பாகவும், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், ஏனாம் தொகுதியில் ஆளுநர் தலையீட்டால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு குறித்தும் தனித்தனியாக மனு அளித்தனர். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
Also read... நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை - ராமதாஸ்
ஜனாதிபதி சந்திப்பு குறித்து நாராயணசாமி டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித்திட்டங்களை கிரண்பேடி தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செ ய்வது குறித்தும் விளக்கினோம். அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தரவிடுவதையும், மிரட்டுவதையும் தெரிவித்தோம் என்றார்.
ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படும் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்
என்றும் அவர் கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kiran bedi, Narayana samy