நெருக்கடியில் தமிழகம்; தேவையான ஆக்சிஜனை உடனடியாக வழங்குக - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மு.க.ஸ்டாலின்

தற்போது, ​​தமிழ்நாட்டில் தினசரி ஆக்ஸிஜனின் நுகர்வு என்பது சுமார் 440 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வராக பொறுப்பேற்றவுடன் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவசரமாக தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

  தற்போது, ​​தமிழ்நாட்டில் தினசரி ஆக்ஸிஜனின் நுகர்வு என்பது சுமார் 440 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த 2 வாரங்களில் கூடுதலாக 400 மெட்ரிக் டன் தேவைப்படும் என தெரிகிறது. அதன்படி, எங்களது மொத்த தேவையானது 840 மெட்ரிக் டன் ஆக இருக்கும். ஆனால், தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 220 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எங்களது அதிகாரிகள் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் மே1 மற்றும் 2ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனினும், இது உத்தரவாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், மருத்துவமனைக்களுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு கடுமையாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் நேற்று அவசர கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில்,

  1. ஐநாக்ஸ், காஞ்சிகோடு (கேரளா) பகுதியிலிருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு குறைந்தபட்சம் 40 மெட்ரிக் டன் ஒதுக்கீடு வழங்கப்படும்.

  2. பிராக்சேர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலிருந்து 60 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட இந்த 60 மெட்ரிக் டன்களில், 20 மெட்ரிக் டன் 2 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும்.

  3. கூடுதலான தேவையை பூர்த்தி செய்ய 120 மெட்ரிக் டன் செயில் மற்றும் லிண்டே ஆலைகளில் இருந்து வழங்கப்படும் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.

  எனினும், இந்த திருத்தப்பட்ட ஒதுக்கீட்டிற்கு உத்தரவு வழங்கப்படாமல், இன்னும் காத்திருப்பிலே உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு என்பது கடும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மருத்துவமனையில் துரதிர்ஷடவசமாக 13 பேர் உயிரிழந்தனர். அதனால், இதுபோன்ற நெருக்கடி நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுக்கு உடனடி உத்தரவு வழங்கவும், தமிழகத்திற்கு தங்களது முழு ஆதரவு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

  இதேபோல், தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 20 ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் ரயில்களை வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

   
  Published by:Esakki Raja
  First published: