மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி; பிரதமரின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதேபோல், மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிகொண்டதற்கும் நான் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

 • Share this:
  மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக, பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21 முதல் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். கொரோனா தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை.

  தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநில அரசுகளுக்கான கொரோனா தடுப்பூசி கொள்கையை ஏற்கனவே வகுத்துள்ளோம். தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும் எதுவும் செலவழிக்க வேண்டாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மீதம் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம். கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும் என்றும் மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை என்றும் பிரதமர் கூறினார்.

  இந்நிலையில், மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  Also read: தடுப்பூசி எனும் ஒரே ஆயுதத்தால் கொரோனாவை வீழ்த்துவோம்; பிரதமர் மோடி உரை

  இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதேபோல், மத்திய அரசின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிகொண்டதற்கும் நான் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

  தடுப்பூசி பதிவு, சரிபார்ப்பு, சான்று தரும் நடைமுறை போன்றவற்றை மாநிலங்களிடம் விட்டுவிடவதே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: