மருத்துவமனை தீ விபத்து: குழந்தைகளை காப்பாற்றிய செவிலியரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்!

மக்கள் அலரல் சத்தம் கேட்டு இரவு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் சமார்த்தியமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளார்.

மக்கள் அலரல் சத்தம் கேட்டு இரவு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் சமார்த்தியமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளார்.

 • Share this:
  சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தின் போது துணிச்சலாக செயல்பட்டு தீ அணைத்த செவிலயிரை முதலமைச்சர் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டினார்.

  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைபிரிவு அமைந்துள்ளது. இந்த தளத்தில் மட்டும் 36 குழந்தைகள் பிரணவாயு செலுத்தும் நிலையிலும் 11 குழந்தைகள் பாலூட்டும் தாய்மார்களிடம் என 47 குழந்தைகள் சிகிச்சை பெற்றுவந்தனர். கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.

  உடனடியாக மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்தில் இருந்து குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மக்கள் அலரல் சத்தம் கேட்டு இரவு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் சமார்த்தியமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தீ கட்டுக்குள் வந்ததும் சிச்சையில் உள்ள குழந்தைகளை மீட்கும் முயற்சியில் செவிலியர்களும் தூய்மை பணியாளர்களும் இறங்கியுள்ளனர். புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டுவிடக்கூடாது என உடனடியாக ஜன்னல் கதவுகளை அடைத்து அங்கிருந்து உயிர் சேதம் இன்றி அத்தனை குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

  இந்நிலையில் விபத்து குறித்து விவரம் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் தீ அணைத்த செவிலியர் ஜெயக்குமாரை தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டி கேடையம் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கினார். இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட அத்தனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குநர் கலைவாணி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  மேலும் விபத்து ஏற்பட்ட போது நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோர் அளித்த வாக்குறுதியின்படி விபத்துக்கு காரணமான ஏசிக்கு மாற்றாக சென்ரலைஸ் ஏசி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: