Home /News /tamil-nadu /

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்!

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்!

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்!

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்!

நீதிக்கட்சிக் காலத்தில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், அடுத்தடுத்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது வரலாறு என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, அக்குழந்தைகளுக்கு மருத்தவ உபகரணங்களை வழங்கி, மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்தின் சேவையினை தொடங்கி வைத்தார்.

    இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அக்குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுடன் கூடிய சென்னை மாநகராட்சியின் சிறப்பு பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் 2009-ஆம் ஆண்டு துணை முதல்வராக இருந்தபோது, மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்புப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோர் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம், தொழிற் பயிற்சி அறை ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



    இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆயிரம் தடைக்கற்கள் போட்டு தடுத்து நிறுத்தப்பட்ட கல்வியை நாம் அடைய பசிப்பிணி வேலி ஆகக்கூடாதென நீதிக்கட்சிக் காலத்தில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், அடுத்தடுத்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது வரலாறு.

    மாணவர் ஒருவர்க்கு ஓர் அணா என்ற மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்தான் இரண்டு மூன்று தலைமுறைகள் கல்வி பெற உதவியது. அந்த வரலாற்றின் சின்னமாக, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்புப் பள்ளியில் கல்வெட்டினைத் திறந்து வைத்தேன்.

    இந்நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் - தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பயன்பாட்டிற்காக மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்புப் பேருந்து சேவை ஆகியவற்றையும் தொடங்கி வைத்தேன்.

    தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் பயணித்த #DravidianModel பாதையில் பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி