முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்: 2ம் கட்டத்தை பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்: 2ம் கட்டத்தை பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

துமைப்பெண் திட்டத்தின் மூலம், பெண்கள் தங்களது சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் ’புதுமைப் பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமைப்பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில், முதல் 10 மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், பெண்கள் தங்களது சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

முன்னதாக, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய மாணவிகள், புதுமைப்பெண் திட்டமே தங்களது கல்லூரிக் கனவை நனவாக்கியதாக கூறினர்.

First published:

Tags: CM MK Stalin, College student, Girl students, Govt Scheme