Home /News /tamil-nadu /

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த பெண் விமானி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த பெண் விமானி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மஹிமா

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மஹிமா

ஹைதரபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் ஸ்கூலில் சேர்ந்து விமான ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

    தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் அகாடமிக்கு சொந்தமான ஒரு விமான பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கிருந்து ஹெலிகாப்டரில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி சென்னையை சேர்ந்த மஹிமா என்ற பயிற்சி மாணவி உயிரிழந்தார்.

    சேலக்குருத்தி, துங்கதுருத்தி கிராம எல்லைகளுக்கு இடையேயுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டரில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் உயிரிழந்த 28 வயது கொண்ட மஹிமாவின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான சென்னை அயனாவரத்தில் எரியூட்டப்பட்டது.

    சென்னை அயனாவரத்தைப் பூர்வீகமாக கொண்ட கஜராஜ் மற்றும் அவரது மனைவிக்கு ஒரே பிள்ளையான மஹிமா, பி.டெக் கோல்டு மெடலிஸ்ட் ஆவார். தனது உயர்படிப்பை அமெரிக்காவில் முடித்து அங்கேயே மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். தனது சிறு வயது முதல் கமர்சியல் பைலட் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட மஹிமாவுக்கு கடந்த 2018 ம் ஆண்டு ஹைதராபாத்தை சேர்ந்த வையாபுரி என்பவருடன் திருமணமாகியுள்ளது.

    இதையும் படிங்க: போர் வரும் என நினைக்கவில்லை: தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி

    கணவர் வையாபுரி நியூசிலாந்தில் பணியாற்றிக்கொண்டே பி.பி.எல் ( Private Pilot Licence) பெற்று விமான பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் மஹிமாவும் அமெரிக்க வேலையை உதறி தள்ளிவிட்டு தனது கணவருடன் சேர்ந்து நியூசிலாந்தில் விமான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் இந்தியா வந்து கமர்ஷியல் பைலட் பயிற்சித் தகுதி தேர்வை வெற்றிகரமாக முடித்த மஹிமா கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹைதரபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் ஸ்கூலில் சேர்ந்து விமான ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

    நடுத்தர குடும்பத்தில் பிறந்த மஹிமா தனது தேவைகளை சிறு வயது முதல் தானே நிறைவேற்றி வந்துள்ளார் என்பதும் இவரது தந்தை கஜராஜ் கொரொனா தொற்றில் பாதிக்கப்பட்டு 9 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

    மகிமா விமானத்தை நன்கு இயக்கும் திறன் கொண்டவர் எனக்கூறிய உறவினர்கள், நேற்று நடந்த விபத்தானது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தான் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் எனவும், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்க முடியும் எனவும் இந்த விபத்தின் உண்மை தன்மை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.



    இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Helicopter Crash, MK Stalin

    அடுத்த செய்தி