Home /News /tamil-nadu /

கச்சத்தீவு தேவாலய விழாவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு தேவாலய விழாவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Mk Stalin | Minister Jaishankar | தமிழக மீனவர்களின் உணர்வோடு கலந்துவிட்ட அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க இலங்கை அரசிடம் பேசி மத்திய அரசு அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி பெற்றுத்தர வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களும், மீனவர்களும் பங்கேற்பது என்பது பன்னெடுங்காலமாக இருந்து வரும் வழக்கம் எனக் கூறியுள்ளார். தற்போது பல்வேறு காரணங்களைக் கூறி இலங்கை அரசு தமிழர்கள் இந்த விழாவில் பங்கேற்க தடை விதித்துள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.



    தமிழக மீனவர்களின் உணர்வோடு கலந்துவிட்ட அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க இலங்கை அரசிடம் பேசி மத்திய அரசு அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Also Read : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்... வேலூரில் பதற்றம்

    இந்தக் கடிதத்தை அமைச்சர் ஜெயசங்கரிடம் டி.ஆர்.பாலு நேரடியாக வழங்கினார். அடுத்த வாரம் இலங்கை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது இதுகுறித்து பேசி உரிய தீர்வு காணப்படும் எனவும் மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி